ஈரோட்டில் கிரிக்கெட் அணிக்கான தேர்வு விழா நாளை தொடக்கம்
கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க கிரிக்கெட் அணித் தேர்வு நாளை நடைபெறுகிறது;
ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்காக ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் சுரேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பெண்களுக்கான தேர்வு நாளை (ஏப்ரல் 20) மாலை 4:00 மணிக்கு, ஈரோடு திண்டல் வித்யா நகர் கே.எஸ். கிரிக்கெட் நெட்டில் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் வீராங்கனைகள், 2013 ஆகஸ்ட் 31க்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.
ஆண்களுக்கான தேர்வு, அதே இடத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், 2006 ஜூன் 1க்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.
பங்கேற்க விரும்பும் அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தங்கள் ஆதார் கார்டு, சீருடை, ஷூ, மற்றும் விளையாட்டு உபகரணங்களை கொண்டுவர வேண்டும்.
மேலும் தகவலுக்கு 94437 28266 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.