காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர்;
மருந்தாளுனரை கரம்பிடித்து தறித்தொழிலாளி தஞ்சம்
ஜலகண்டாபுரம் அகிலாண்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 23 வயதான மாலினி என்ற மருந்தாளுனரும், மலையம்பாளையம் காட்டுவளவைச் சேர்ந்த 29 வயதான தறித்தொழிலாளி லோகநாதனும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 13ம் தேதி இருவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மறுநாள் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினர், நேற்று தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கூறி ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் இரு தரப்பு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.