சேலத்தில் புதிய ரேஷன் கடை கட்டுமானம்
சேலம் மாவட்டத்தில் புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.இந்த செய்தி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது;
பனமரத்துப்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி தொடக்கம்
பனமரத்துப்பட்டி நிலவாரப்பட்டி ஊராட்சி அரசமரத்தடியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில், 1,400க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் நிவாரண பொருட்கள் பெறுகின்றனர். கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்படும் காரணத்தால், ரேஷன் கடையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, ஏலக்கரடு அருகே உள்ள பனங்காட்டில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்ட திட்டமிடப்பட்டது. ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் பூமி பூஜை நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தி.மு.க. சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலர் உமாசங்கர், ஊராட்சி செயலர் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பணிகளைத் தொடக்கி வைத்தனர்.