விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தலைவாசல் பகுதியில் கல்லூரி மாணவர் ஷியாம் என்பர் எதிரே வந்த வாகனம் மோதி உயிரிழப்பு;

Update: 2025-05-15 04:40 GMT

விபத்தில் மாணவர் உயிரிழப்பு – தலைவாசலில் சோகத்துடன் துயரம்

தலைவாசல் அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் ஷியாம் (வயது 20), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் மேளம் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த இரவு 11:00 மணியளவில், பெரம்பலூரில் மேளம் அடிக்கும் பணியை முடித்துவிட்டு, உடும்பியம் வழியாக ஸ்பிளெண்டர் பைக்கில் ஹெல்மெட் அணியாமலே பயணித்தார். லத்துவாடி சோதனைச் சாவடிக்கு அருகில் வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஷியாம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சம்பந்தமாக வீரகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News