தமிழில் பெயர் பலகை அமைக்க கலெக்டர் அதிரடி

மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைக்காவிட்டால் அபராதம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்;

Update: 2025-04-12 07:00 GMT

ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகக் கடைகள், தொழில்முனைவர்களும், கல்வி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் தங்களின் பெயர் பலகைகளை தமிழில் முதன்மையாகவும், அதன் பின்னர் ஆங்கிலத்திலும், மேலும் விரும்பிய மொழியிலும் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மே 15க்குள் இவ்வாறு பெயர் பலகைகளை அமைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களை ஆய்வு செய்து, விளக்கம் கேட்டு, அறிவிப்பு வழங்கி, அதற்குப் பிறகு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News