பள்ளி வாகனங்களுக்கு பெரும் பரிசோதனை – 1,072 வாகனங்களில் திடீர் ஆய்வு
ஆண்டு பரிசோதனையில் ஈரோட்டில் 1,072 பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்;
ஈரோட்டில், ஆண்டு பரிசோதனையில் 1,072 பள்ளி வாகனங்களின்-பாதுகாப்பு அம்சங்களை கலெக்டர் நேரில் ஆய்வு:
ஈரோடு: ஈரோடு மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனங்களின் ஆண்டு கூட்டாய்வு (Annual Fitness Check) பணிகள், ஏ.ஈ.டி பள்ளி வளாகத்தில் ஆரம்பமாகின. இந்த நிகழ்வை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்து, நேரில் ஆய்வு செய்தார்.
மேற்கு, கிழக்கு மற்றும் பெருந்துறை பகுதிகளிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 1,072 பள்ளி வாகனங்கள் இதில் பங்கேற்றன. அரசு விதிமுறைகள் படி, வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு சாதனம், முதலுதவி பெட்டி, சிசிடிவி கேமராக்கள், படிக்கட்டுகள், அவசரக் கதவு, பள்ளி எம்பளம், வெளிப்படையான தகவல் குறிகள், ஜன்னல் பாதுகாப்பு கம்பிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் நன்கு இருக்கின்றனவா என, கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதே நிகழ்வில், தீயணைப்பு துறையினர் மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பேரிடர் சமயத்தில் எப்படி மீட்புப் பணிகள் நடத்துவது என்பதைக் குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர்.
பரிசோதனையில் குறைகள் உள்ள வாகனங்களுக்கு ஒரு வாரம் நேரம் வழங்கப்பட்டு, திருத்தப்பட்டபின் மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போக்குவரத்து துறை அதிகாரிகள், RTO ரவி, பதுவைநாதன், மாதவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.