தாராபுரத்தில் 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் – கடத்தல் முறியடிப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பொள்ளாச்சி சாலையில் குடிமைப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.;
தாராபுரத்தில் 1,350 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் முறியடிப்பு – ஒருவர் கைது :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பொள்ளாச்சி சாலையில் குடிமைப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தளவாய்பட்டினத்தை சேர்ந்த தங்கராஜ் (39) என்பவர் ஓட்டிய டாட்டா ஏஸ் வாகனத்தில், உரிய ஆவணங்கள் இன்றி 1,350 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் அரிசியையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து, தங்கராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர்