அரசு பேருந்திலிருந்து விழுந்த குழந்தை உயிரிழப்பு
சேலத்தில் பஸ் பயணத்தில் குழந்தை விழுந்து உயிரிழப்பு; ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் சஸ்பெண்ட்;
சங்ககிரியில் பஸ்சில் இருந்து விழுந்த குழந்தை பலி: டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
தர்மபுரி மாவட்டம் கருங்கல்லுாரை சேர்ந்த ராஜதுரை மற்றும் முத்துலட்சுமி தம்பதியினர், மே 12ஆம் தேதி இரவு சேலத்தில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் இரண்டு குழந்தைகளுடன் பயணித்தனர். பஸ்ஸின் முன்புற படிக்கட்டு அருகே உள்ள சீட்டில் ராஜதுரை தனது ஒன்பது மாத ஆண் குழந்தையை தோளில் போட்டு தூங்கிக்கொண்டிருந்தார். இரவு 10:15 மணியளவில் சங்ககிரி அருகே வளையக்காரனுார் மேம்பாலத்தில் பஸ் சென்றுகொண்டிருந்த போது டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், கதவு சரியாக சாத்தப்படாத நிலையில் குழந்தை படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்த கோர சம்பவம் குறித்து ராஜதுரை அளித்த புகாரின் பேரில் தேவூர் போலீசார் விசாரணை நடத்தி பஸ் டிரைவர் சிவன்மணி (வயது 48) மற்றும் கண்டக்டர் பழனிசாமி (வயது 50) ஆகியோரை கைது செய்து, பின்னர் ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர்.
பணியின்போது கவனக்குறைவாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் துரைசாமி அவர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.