வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பு – புதிய தோற்றத்தில் விரைவில் திறப்பு!

தமிழரின் அடையாளச் சின்னமாக விளங்கும் சென்னை வள்ளுவர் கோட்டம், ரூ.80 கோடி மதிப்பீட்டில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-05-22 09:40 GMT

புதிய அழகில் வள்ளுவர் கோட்டம் – ரூ.80 கோடி செலவில் மேம்படுத்தல், விரைவில் திறப்பு :

தமிழரின் அடையாளச் சின்னமாக விளங்கும் சென்னை வள்ளுவர் கோட்டம், ரூ.80 கோடி மதிப்பீட்டில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள், பாரம்பரியத்தை காக்கும் வகையில் நவீன வசதிகளுடன் இணைந்ததாக அமைந்துள்ளன. விரைவில் தமிழக முதல்வரால் திறக்கப்பட உள்ள இந்த இடம், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அமைவுள்ளது. மேம்படுத்தப்பட்ட கோட்டத்தில், ஒரே நேரத்தில் 1,400 பேர் அமரக்கூடிய ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட கூட்ட அரங்கு, சிறந்த ஒலி-ஒளி வசதிகள் கொண்ட காட்சிக்கூடம், பாரம்பரிய உணவுகளுக்கான சிறப்பு உணவுக்கூடம் மற்றும் திருக்குறளை மையமாகக் கொண்ட குறள் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வள்ளுவர் கோட்டம், மாணவர்களுக்கு கல்வி, பாரம்பரியத்தை உணர்த்தும் இடமாகவும், மக்களுக்கு ஓய்வுத் தளமாகவும் பயன்படவிருக்கிறது.

Tags:    

Similar News