சாலை விபத்தில் மாணவர்கள் உயிரிழப்பு

விபத்தில் இருவரின் மண்டை பகுதியிலும் கடுமையாகக் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்;

Update: 2025-04-24 04:30 GMT

திருச்செங்கோடு அருகே நடந்த ஒரு மனதை கலங்கச் செய்யும் சாலை விபத்தில், கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி (19) மற்றும் வெங்கமேட்டையைச் சேர்ந்த திருப்பதி (19) ஆகியோர் நண்பர்களாக இருந்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர்.

நேற்று காலை, இருவரும் சுசூகி அக்சஸ் டூவீலரில் கல்லூரிக்கு சென்று, செமஸ்டர் தேர்வை எழுதிய பின்னர், மாலை 3:30 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டனர். டூவீலரை  திருப்பதி ஓட்டியபோது, பாலாஜி பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் காட்டுப்பாளையம் பின்வழிச் சாலையில் சென்றபோது, எதிரே வந்த 'டாடா பொலிரோ' சரக்கு வாகனத்தின் பக்கவாட்டு கொக்கியில் டூவீலர் உரசியதால், இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்து, சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இந்த பயங்கர விபத்தில் இருவரும் மண்டை பகுதியில் கடுமையாகக் காயம் அடைந்து, மூளை சிதறும் அளவுக்கு தாக்கம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது டூவீலர் முற்றிலும் நொறுங்கி சுக்குநுறாகியிருந்தது. விபத்திற்குப் பொறுப்பான சரக்கு வாகன டிரைவர் ரமேஷ் (37) கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வு கல்லூரி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தயது. 

Tags:    

Similar News