நெரிஞ்சிப்பேட்டை கதவணை மூடல், படகு சேவைக்கு தற்காலிக பிரேக்

நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் 2025 ஆண்டு பராமரிப்பு காரணமாக படகு போக்குவரத்து முடங்கியது;

Update: 2025-04-28 06:00 GMT

நெரிஞ்சிப்பேட்டையில் மின் கதவணை பராமரிப்பு; காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து நிறைவு

பவானி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை பகுதிகளிலுள்ள மின் கதவணைகளில் தேக்கி வைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின் நிலையத்தில், நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் மட்டும் 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், 15 நாட்கள் மின் கதவணை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன் காரணமாக, தேக்கி வைத்திருந்த தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதற்கமைய, நேற்று முன்தினம் இரவு தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. இதனால், நெரிஞ்சிப்பேட்டை - பூலாம்பட்டி இடையே நடைபெறும் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கோனேரிப்பட்டி சென்று, காவிரி ஆற்றுப் பாலம் வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் நிலை உருவானது.

Tags:    

Similar News