PTO மற்றும் உதவியாளர் பணி இடைநீக்கம்
அதிகாரிகள் தூய்மை பணியாளர் பெண்ணின் நியாயத்திற்காக கடுமையான நடவடிக்கை மேர்கொண்டனர்;

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய அலுவகத்தில் ஏற்பட்ட பாலியல் புகார் விவகாரம் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. அலுவக பஞ்சாயத்து சங்கத் தலைவர் அலுவலராக (P.D.O.) பணியாற்றிய பரமசிவம் (வயது 59) மீது, முந்தைய காலகட்டத்தில் அந்த அலுவகத்தில் தூய்மை பணியாளராக மூன்று மாதங்கள் பணியாற்றிய பெண் ஒருவர், பாலியல் தொந்தரவு புகார் அளித்திருந்தார். இந்த புகார் நேரடியாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவியிடம் சமீபத்தில் புகாரளிக்கப்பட்டது.
புகாரை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் விசாரணை குழுவை அமைத்து, ஊரக வளர்ச்சித்துறை தணிக்கை அலுவலர் மதுமிதா மற்றும் கூடுதல் திட்ட அலுவலர் நந்தினி ஆகியோரின் தலைமையில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே ஏப்ரல் 9ம் தேதி நம் நாளிதழ் விரிவான செய்தியை வெளியிட்டது.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பி.டி.ஓ பரமசிவம் மற்றும் இவருடன் பணிபுரிந்த உதவியாளர் கணேசன் ஆகியோர் இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கலெக்டர் பிருந்தாதேவி இருவரையும் பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அரசு அலுவகங்களில் பாலியல் தொந்தரவு சம்பவங்களை தடுக்கவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியாகவும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.