சென்னிமலை முருகன் கோவிலில்,புதிய தங்க ரதம் ஒன்றை உருவாக்கும் பணி ஆரம்பம்

சென்னிமலை முருகன் கோவிலில், புதிய அறங்காவலர் குழுவினர், கோவிலுக்கென தங்க ரதம் ஒன்றை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்;

Update: 2025-05-02 04:10 GMT

சென்னிமலை முருகன் கோவிலில் தங்க ரதம்

ஈரோடு மாவட்டம்:

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய புனிதத் திருத்தலமாகக் கருதப்படும் சென்னிமலை முருகன் கோவிலில், பக்தர்கள் வாரம் தோறும், குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் கூட்டமாக வருகை தரி வருகின்றனர். தற்போது இங்கு வழிபாட்டில் உள்ள வேங்க மர தேர் மட்டுமே உள்ள நிலையில், கோவிலின் அறங்காவலர் குழு புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர் .

புதிய அறங்காவலர் குழுவினர், கோவிலுக்கென தங்க ரதம் ஒன்றை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்காக பக்தர்களிடம் தங்க காணிக்கையாக வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தங்களால் இயன்ற அளவு தங்கத்தை வழங்க விருப்பமுள்ள பக்தர்கள், கோவில் அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் பெயர் பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான விளம்பர பதாகைகள் கோவிலின் ராஜகோபுரம் முன்பு வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் ஆதரவுடன் தங்க ரதம் வெகு விரைவில் நிகழ்வாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News