ராசி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் சாதனைகள்
ஈச்சம்பட்டியில் உள்ள ராசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை;
ராசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர் தேர்ச்சி சாதனை: ஆதிஸ்ரீக்கு பள்ளி அளவில் முதல் இடம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரை மற்றும் ஈச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் ராசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மாணவியர், 2025ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வில் சிறப்பான முடிவுகளைப் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டின் தேர்வில் மாணவி ஆதிஸ்ரீ, 600 மதிப்பெண்களில் 592 பெறும் சாதனையுடன் பள்ளி அளவில் முதல் இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து மாணவி சாதனா 590 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம், மாணவி ஹரிணிஷா 586 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.
கணினி அறிவியல் பாடத்தில் 14 மாணவர்கள், கணினி பயன்பாட்டு பாடத்தில் 4 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அரிய சாதனை படைத்துள்ளனர்.
இம்மாணவர்களின் விடாமுயற்சியையும், ஆசிரியர்களின் உழைப்பையும் பாராட்டி, பள்ளி தலைவர் ராஜமாணிக்கம், செயலர் மணி, கல்வி குழு தலைவர் கனகராஜன், பொருளாளர் ரவிக்குமார், துணைத்தலைவர் ரங்கசாமி, இணைச் செயலர் குமரேசன், இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், மாசிலாமணி, மதியழகன், சுசீலா, ஆனந்த், கார்த்திக் மற்றும் பள்ளி முதல்வர் அனுஷா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் இந்தத் தேர்ச்சி, பள்ளியின் தரத்தை மேலும் உயர்த்தியதாக கல்வி நிர்வாகம் பெருமிதம் தெரிவித்தது.