ஈரோட்டில், இயற்கை உணவுகளுக்கான சிறப்பு சந்தை

மே 4ம் தேதி காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, அங்கக (மரபணு மாற்றமில்லாத இயற்கை) வேளாண் சந்தை நடைபெற உள்ளது;

Update: 2025-05-02 09:30 GMT

ஈரோட்டில் வேளாண் சந்தை மே 4ம் தேதி

தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், ஈரோடு வ.உ.சி பூங்கா வளாகத்தில் உள்ள வாக்கர்ஸ் கிளப்பில், வரும் மே 4ம் தேதி காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, அங்கக (மரபணு மாற்றமில்லாத இயற்கை) வேளாண் சந்தை நடைபெற உள்ளது.

இந்த சந்தையில், அங்கக சான்று பெற்ற விவசாயிகள் நேரடியாகவே தங்கள் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், எண்ணெய்கள், மஞ்சள் தூள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்ய உள்ளனர்.

நஞ்சு இல்லாத, சுகாதாரமான உணவுகளை விரும்பும் நுகர்வோர், இந்த சந்தையில் கலந்து கொண்டு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்கி மாறுபட்ட சுகாதார வாழ்க்கையை உருவாக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News