எடப்பாடி கே. பழனிசாமியின் 71வது பிறந்த நாளில் குழந்தைகளுக்கு அரை பவுன் தங்க நாணயம் பரிசு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் 71வது பிறந்த நாளையொட்டி, உள்ளூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு அரை பவுன் தங்க நாணையம் வழங்கி சிறப்பித்தனர்.;
இ.பி.எஸ் பிறந்தநாளில் தங்க நாணயம் பரிசு:
பிறந்த குழந்தைகளுக்கு அரை பவுன் தங்க நாணையம் வழங்கிய அதிமுக நிர்வாகிகள்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் 71வது பிறந்த நாளையொட்டி, உள்ளூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தலா அரை பவுன் தங்க நாணை வழங்கி சிறப்பித்தனர்.
இந்த விழாவில், திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலிலும், முன்னாள் எம்எல்ஏ நடராஜ் நேரில் வந்து பரிசுகளை வழங்கினார். பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இதில் திரளாக கலந்துகொண்டனர்.