மனைவியின் இறுதி சடங்கில் கணவரும் உயிரிழப்பு – ஈரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்

மனைவி மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து, அவரது இறுதி சடங்கில் கணவன் திடீரென மயங்கி விழுந்து, உயிரிழந்தார்.;

Update: 2025-05-22 04:00 GMT

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி – அம்மாபேட்டையில் கணவர் மனைவியின் இறுதியில் உயிரிழப்பு :

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் கிராமத்தில், 78 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் குழந்தையப்பன் மற்றும் அவரது மனைவி சம்பூரணம் (70) தம்பதிகள், இறப்பிலும் இணைபிரியாத காதல் கதையால் அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர். சம்பூரணம் மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து, அவரது இறுதி சடங்கில் குழந்தையப்பன் திடீரென மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News