மதுபோதையில் செங்கல் அடுக்கில் தூங்கிய வாலிபர் பரிதாப பலி
மதுபோதையில் செங்கல் அடுக்கில் தூங்கிய வாலிபர் அடுக்குகளுக்கு இடையில் தலைகுப்புற இருந்த நிலையில் சடலமாக கிடந்தார்.;
மதுபோதையில் செங்கல் அடுக்கில் தூங்கிய வாலிபர் பரிதாப பலி – ஈரோட்டில் சோகம்:
ஈரோடு மாவட்டம், வைராபாளையத்தில் உள்ள முருகன் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த சசிகுமார் (வயது 23) என்ற வாலிபர், கடந்த 5ஆம் தேதி இரவு மதுபோதையில் செங்கல் அடுக்குகளில் ஒன்றின் மீது படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. அவர் திருமணமாகாதவர் என்றும், வேலை முடிந்த பிறகு சூளையிலேயே தங்கியிருந்தார் என்றும் தகவல்.
அடுத்த காலை அவரை தேடிய போது, செங்கல் அடுக்குகளுக்கு இடையில் தலைகுப்புற நிபந்த நிலையில் சடலமாக கிடந்தார். உடலில் பல சிராய்ப்பு காயங்கள் காணப்பட்டதால், உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.