மழைக்கு மரத்தடியில் ஒதிங்கியவர் மீது, மரம் விழுந்து உயிரிழந்தார்

மழைக்கு மரத்தடியில் ஒதிங்கியவர் மீது மரம் சாய்த்து விழுந்ததில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிழந்தார்;

Update: 2025-05-07 07:21 GMT

மழைக்கு மரத்தடியில் ஒதிங்கியவர் மீது மரம் விழுந்து உயிரிழந்தார்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமைத் தொழிலாளியாக பணியாற்றிய தங்கவேல் (63), நேற்று மாலை 5 மணி அளவில் பெய்த மழையிலிருந்து தற்காலிகமாக ஒளிக்க, விற்பனை கூடத்திற்கு வெளியே உள்ள வேலமரத்தின் கீழ் நின்றார்.

திடீரென அந்த மரம் சாய்ந்து அவர் மீது விழுந்தது. பெரும் காயங்களுடன் அவர், சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர்.

இது குறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News