வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்த 19 வயது கல்லுாரி மாணவி- கோபியில் அரதிர்ச்சி சம்பவம்
தனியார் கல்லூரியில் படித்து வரும் பெண் சமீபத்தில் வீட்டிலேயே குழந்தை பெற்ற சம்பவம் கோபியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது;
கல்லூரி மாணவிக்கு வீட்டிலேயே குழந்தை பிறப்பு – கோபியில் சுகாதாரத் துறை விசாரணை :
கோபி அருகே சீதாம்மாள் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்த சுப்ரீத் (வயது 20, திருப்பூர்) என்பவர், 19 வயது கல்லூரி மாணவியை தனது மனைவியாகக் கூறி தங்கியிருந்தார். அந்த இளம்பெண், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தவர்.
சமீபத்தில், வீட்டிலேயே அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த பின் ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கால், அவசரமாக கோபி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கோபி நகர ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மருத்துவ குழு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு விசாரணை நடத்தப்பட்டபோது, அந்த இளம்பெண் வீட்டிலேயே குழந்தையை பெற்றுள்ளார் என்பது உறுதியானது.
மேலும், பெண்ணின் பெற்றோர் கோபியிலேயே வசித்து வருகின்றனர் என்பதும் தெரியவந்தது. உடனடியாக சுப்ரீத் மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், அவர்கள் மகள் கோவையில் கல்லூரியில் படித்து வருவதாகவும், குழந்தை பிறந்த விவரத்தைக் குறித்து அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தனர்.