தீவிரவாத தாக்குதலை கண்டித்து தாராபுரத்தில் கண்டனக் கொந்தளிப்பு
சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து, தாராபுரத்தில் நேற்று தீவிர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
காஷ்மீர் தாக்குதலை கண்டித்து தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்: சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், அதற்கு காரணமாக பழைய அரசியல் முடிவுகளே காரணம் என வலியுறுத்தியும், தாராபுரத்தில் நேற்று தீவிர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார், மாநில இளைஞரணி செயலாளர் யோகேஸ்வரன், ஓ.பி.சி. பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, "தேசிய பாதுகாப்பை அழித்தது யார்?" எனக் கேட்டு முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில், தலைவர்கள், காங்கிரசின் இளகிய அணுகுமுறைகளே இன்றைய தீவிரவாத வளர்ச்சிக்கு வாய்ப்பு வழங்கியது எனக் கடும் விமர்சனம் செய்து, தற்போது நிலவும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.