பழனி மலை கோவிலுக்கு 4 டன் காய்கறி வழங்கிய அன்னதானக் குழு
பழனி மலை முருகன் கோவிலில் நடைபெறும் அன்னதான சேவைக்கு, நன்கொடை வழங்கும் ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது;
புன்செய் புளியம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் பண்ணாரி அம்மன் அன்னதானக் குழு சார்பில், பழனி மலை முருகன் கோவிலில் நடைபெறும் அன்னதான சேவைக்கு நன்கொடை வழங்கும் ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
பக்தர்களுக்கு தினசரி வழங்கப்படும் அன்னதானத்திற்காக, இந்த குழுவினர் தக்காளி, கத்தரி, கேரட், முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை தொகுத்து, மொத்தம் 4 டன் எடையுடன் லாரி மூலமாக கோவில் நிர்வாகத்திடம் அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, பழனி மலை கோவில் நிர்வாகத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அனுமதி பெற்று, இந்த நற்பணியில் அவர்கள் பங்கேற்றுள்ளனர். பக்தர்களின் பசியாற்றும் இந்த சேவையில் சிறு பங்கு போடவே இந்த முயற்சி, என அன்னதான குழுவினர் தெரிவித்தனர்.
இது போன்ற தொண்டு பணிகள் சமூகத்தில் நன்மையை விதைக்கின்றன என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.