வாரச்சந்தை வியாபாரிகள் கவனத்திற்கு
வாரச்சந்தை மேம்பாட்டுக்கான ஆலோசனை கூட்டம் வரும் 21ம் தேதி சிறப்பு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது;
புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் உள்ள வாரச்சந்தையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வியாபாரிகளின் கருத்துகளை அறிந்து கொள்ளும் நோக்குடன், எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு பாக்கியலட்சுமி திருமண மண்டபத்தில் சிறப்பு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் தொடர்பாக நகராட்சி கமிஷனர் கருணாம்பால் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசின் மானிய உதவியுடன், வாரச்சந்தையின் உள்கட்டமைப்பு, வர்த்தக வசதிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சூழல்களை மேம்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்தார். இந்த மேம்பாட்டு பணிகள் நேர்த்தியான முறையில் செயல்பட அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்பதால், வாரச்சந்தையில் கடைகள் வைத்திருக்கும் அனைத்து வியாபாரிகளும் கட்டாயமாக கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை நேரில் தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாரச்சந்தையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் செயல்திறனை உயர் நிலையில் கொண்டு வரவே இந்த கலந்தாய்வு கூட்டம் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.