பஞ்சாப் கிங்ஸ் 111 ரன்களுடன் கொல்கத்தா அணி வீழ்த்தி வரலாற்று சாதனை
திகிலான திருப்பம் பஞ்சாப் கிங்ஸ் 111 ரன்களுடன் கொல்கத்தாவை டிஃபெண்ட் செய்து வெற்றி பெற்றது;
PBKS vs KKR: ஸ்ரேயாஸின் அபார வியூகம் - பஞ்சாப் கிங்ஸின் வரலாற்று வெற்றி
முலான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ரன்கள் எடுத்து வெறும் 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (30), பிரியன்ஸ் ஆர்யா (22) மற்றும் சஷாங் சிஹ் (18) மட்டுமே சிறப்பாக ஆடினர். 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, ரகுவன்ஷி-ரஹானே இருவரும் 55 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் யுவேந்திர சஹலின் (4 விக்கெட்) மற்றும் யான்சனின் (3 விக்கெட்) அபார பந்துவீச்சால் கொல்கத்தா அணி 95 ரன்களுக்கு சுருண்டது. ஐபிஎல் வரலாற்றிலேயே வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோர் என்ற சாதனையுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.