மூன்று கார்கள் தொடர் மோதலில் நொடியில் தீ விபத்து- தாராபுரத்தில் பரபரப்பு

தாராபுரம் பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து கார்கள் மோதல் – காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2025-05-13 05:30 GMT

தாராபுரம் பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து கார்கள் மோதல் – காஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து :

தாராபுரம்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (47), அவரது மனைவி பானுரேகா (44) மற்றும் 11 வயது மகளுடன், காங்கேயம் அருகே உள்ள குலதெய்வக் கோவிலுக்குத் தரிசனம் செய்த பிறகு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மாலை 6:30 மணியளவில், தாராபுரம் பைபாஸ் சாலையில் தனியார் மகளிர் கல்லூரி அருகே பயணிக்கும்போது, முன்னே சென்ற கார் திடீரென நின்றது. அதில், கிருஷ்ணகுமார் ஓட்டிய கார் மோதியது. பின்னால் வந்த இன்னொவா கார் மீண்டும் கிருஷ்ணகுமாரின் காரை மோதியது.

இந்த மோதலில், கிருஷ்ணகுமாரின் காரில் இருந்த காஸ் சிலிண்டர் கசியக்கூடிய நிலையில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதில், கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மனைவி தீக்காயம் அடைந்தனர். சிறுமி சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.

இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News