பாதுகாப்பு ஊழியர் சாலை விபத்தில் உயிரிழப்பு

சேலத்தில் நடந்த சாலை விபத்தில் பாதுகாவலர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2025-05-08 09:00 GMT

வாகனம் மோதி காவலாளி உயிரிழப்பு

சங்ககிரியை சேர்ந்த நாட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (வயது 65), அங்குள்ள அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று பணி முடித்து சைக்கிளில் சங்ககிரி நோக்கி ஈரோடு சாலையில் சன்னியாசிப்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது, இரவு 7:00 மணியளவில் நாட்டாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News