தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ஈரோட்டில் ஏப்ரல் 25ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது;
ஈரோடில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – ஏப்ரல் 25ம் தேதி நடக்கிறது
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், இம்மாதம் ஏப்ரல் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம், இப்போது பல துறைகளை உள்ளடக்கியதாக பரந்தளவில் நடைபெற உள்ளது. இதில்:
எழுத்தறிவு உள்ளவர்கள்
பட்டம் பெற்றவர்கள்
செவிலியர்கள்
டெய்லர்கள்
கணினி இயக்குநர்கள்
தட்டச்சர்கள்
ஓட்டுனர்கள்
என பல்வேறு துறைகளுக்கான வேலை வாய்ப்புகள் தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. தகுதியான நபர்களை நேரில் நேர்காணல் மூலம் தேர்வு செய்ய வேலை வழங்குநர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் தகவலுக்கு:
86754 12356
94990 55942
மின்னஞ்சல்: erodemegajobfair@gmail.com
வேலை தேடுவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு – தாங்கள் தகுதியுடன் வருகை தர மறவாதீர்கள்