ஈரோட்டில் போப் பிரான்சிஸை நினைத்து மெழுகுவர்த்தி ஊர்வலம்

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் அமைதி ஊர்வலம் நேற்று நடந்தது;

Update: 2025-04-28 08:40 GMT

போப்பின் மறைவையொட்டி ஈரோட்டில் அமைதி ஊர்வலம்

ஈரோடு: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, ஈரோட்டிலுள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் நேற்று அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆலய மறை வட்ட முதன்மை குருவும், பங்கு தந்தையுமான ராயப்பன் தலைமை வகித்தார்.

ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், கச்சேரி வீதி, ப.செ.பார்க், மணிக்கூண்டு மற்றும் நேதாஜி சாலை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. அங்கு போப் பிரான்சிஸ் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி, இரங்கல் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, அமைதியான முறையில் புகழ் வணக்கம் செலுத்தினர்.

Tags:    

Similar News