பைக்கில் சென்ற சுற்றுலா பயணம் பஸ்ஸில் மோதி மரணம்

உறவுக்கார பெண்ணுடன் ஹோண்டா பைக்கில் பெங்களூரிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றவர் பஸ்சில் மோதி உயிரிழந்தார்;

Update: 2025-05-06 03:40 GMT

கொடைக்கானல் பயணம் – இரவு நேரத்தில் நேர்ந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர்

பெங்களூரை சேர்ந்த ஹேமந்த் குமார் (வயது 30), ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர். கடந்த இரவு, அவரது உறவுக்கார பெண் கீதா (வயது 26) உடன் ஹோண்டா பைக்கில் பெங்களூரிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டிருந்தார்.

இவர்கள் தாராபுரம்-உடுமலை சாலையில் ரவுண்டானா அருகே நேற்று நள்ளிரவு 1:45 மணியளவில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று பைக்கில் மோதியது. இதனால் ஹேமந்த் குமார் பசும் பாய்ந்து விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்த கீதா இடுப்பில் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

Tags:    

Similar News