காரில், காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தத்தில் பைபாஸ் சாலையில் பெரும் பரபரப்பு!
காரில் இருந்த கேஸ் சிலிண்டர் கசிந்து தீப்பிடித்ததில் கணவன், மனைவி இருவரும் தீக்காயமடைந்தனர்.;
தாராபுரம் பைபாஸ் அருகே பரபரப்பான சம்பவம் :
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சேர்ந்த கிருஷ்ணகுமார் (47), அவரது மனைவி பானுரேகா (44), மற்றும் 11 வயது மகள் மூவரும் காங்கேயம் அருகே உள்ள தங்கள் குலதெய்வக் கோவிலுக்குத் தரிசனம் செய்து, மீண்டும் பொள்ளாச்சிக்கு புறப்பட்டனர்.
மாலை 6:30 மணியளவில் தாராபுரம் பைபாஸ் சாலையில் தனியார் மகளிர் கல்லூரி அருகே சென்றபோது, அவர்கள் சென்ற காருக்கு முன்பாக ஓடிய கார் திடீரென நிற்க, கிருஷ்ணகுமார் அதில் மோதினார். இதே வேளையில், பின்னால் வந்த இன்னோவா கார், கிருஷ்ணகுமார் காரின் மீது மோதியது.
இந்த சிக்கலில், கிருஷ்ணகுமாரின் காரில் இருந்த கேஸ் சிலிண்டர் கசிந்து தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மனைவி தீக்காயமடைந்தனர். சிறுமி, கைகளில் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
சம்பவத்தால் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.