இளைஞரை தாக்கிய மார்ப நபர்கள்

அன்னதானபட்டியில் இளைஞரை தாக்கிய மர்பநபர்கள், காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதி;

Update: 2025-04-23 08:50 GMT

வாலிபரை தாக்கியவர் கைது

சேலம்: சேலம், அன்னதானப்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த் (33), கடந்த 20-ம் தேதி தனது நண்பர்களுக்கு நீச்சல் பழக்கிக் கொடுக்க கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகே உள்ள கிணற்றுக்குச் சென்றார். அங்கு வந்த சிலர், ஆனந்தின் நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை ஆனந்த் எச்சரித்திருந்தார்.

இதனால் அன்று மாலை அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள், கிணற்றுப் பகுதியில் நடந்த தகராறு குறித்து, ஆனந்திடம் பேசி வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து அவரை, பீர் பாட்டிலால் தாக்கினர். படுகாயமடைந்த ஆனந்த், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது புகாரின்படி, அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரித்து, அன்னதானப்பட்டி, 4 ரோட்டைச் சேர்ந்த பிரேம்குமார் (27) என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Tags:    

Similar News