ஈரோட்டில் கோர விபத்து - கர்நாடக பக்தர்கள் விபத்தில் பலி! பயணிகள் யாரும் உயிர் தப்பவில்லை!
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கடந்த இரவில் ஏற்பட்ட கோர சாலை விபத்து உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
தாளவாடியில் சோகம்: காரும் லாரியும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு :
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கடந்த இரவில் ஏற்பட்ட கோர சாலை விபத்து உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் மாதேஸ்வரர் கோவிலுக்கு தரிசனத்திற்குப் பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த கார், எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்தத் துயரமான விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், விசாரணையை தொடங்கி, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். விபத்து குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.