கார் மோதி முதியவர் பலி

கோபி அருகே, 70 வயது முதியவர் மீது கார் மோதி உடலில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்;

Update: 2025-04-15 08:40 GMT

கோபி அருகே கரட்டடிபாளையத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 70), கூலி தொழிலாளியாக இருந்தவர் நேற்று காலை அவர் தனது சைக்கிளில் சத்தி சாலையில் உள்ள போடிசின்னாம்பாளையம் வழியாக பயணித்துக் கொண்டிருந்த போது, புன்செய் புளியம்பட்டியைச் சேர்ந்த அன்பு ஓட்டிய ஹூண்டாய் கார் அவரை வேகமாக மோதி வீழ்த்தியது.

விபத்தில் கணேசன் தலையில் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் சதையுரிந்து கீழே வீழ்ந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கணேசனின் மனைவி கமலம் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்குப் காரணமான காரையும், அதன் டிரைவரையும் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News