ஒரே அரசு பள்ளியில் 31 மாணவர்கள் NMMS தேர்ச்சி

மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகைக்கு 479 மாணவர்கள்! மாநிலத்தில் சேலம் 2வது இடம்;

Update: 2025-04-17 10:00 GMT

ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வு - ஒரே அரசு பள்ளியில் 31 பேர் தேர்ச்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதந்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் கூறியதாவது: "நடப்பாண்டு கல்வியாண்டில் சேலம் மாவட்டத்தில் இருந்து 479 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். இதில் இடைப்பாடி செட்டிமாங்குறிச்சி அரசு மாதிரிப் பள்ளியிலிருந்து 31 மாணவர்கள் அதிகபட்சமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல், ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 17 மாணவர்கள், கோமாளியூர் மற்றும் நெத்திமேடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து தலா 13 மாணவர்கள், பொம்மியாம்பட்டியில் இருந்து 11 மாணவர்கள், சேலம் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து 10 மாணவர்கள், ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 7 மாணவர்கள் என பல்வேறு பள்ளிகளில் இருந்து மொத்தம் 479 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்."

Tags:    

Similar News