400 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
சேலத்தில், கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 400 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக நடந்தது;
சேலம் அரசு கலைக்கல்லூரியில், மாணவர் வேலை வாய்ப்பு மற்றும் முன்னேற்ற குழுமத்தின் ஏற்பாட்டில், வேலைவாய்ப்பு முகாம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி முதல்வர் செண்பலட்சுமி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். வேலைவாய்ப்பு முகாமில் 30 முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு நேரடி தேர்வுகளை நடத்தின. கல்வித் தகுதி மற்றும் திறன்கள் அடிப்படையில் 400 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இத்தேர்வானவர்களுக்கு, கல்லூரி முதல்வர் நேரில் பணிநியமன ஆணையை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். முகாமில் பேராசிரியர்கள் திருமுருகன், சுரேஷ்பாபு, சரவணகுமார், பானுமதி, கண்ணன் ஆகியோரும், தேர்வு நடத்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.