சட்டவிரோதமகா மது விற்பனை செய்த 5 பேர் கைது

கைது செய்யப்பட்ட 5 பேரிடம் 40 மதுப் பாட்டில்கள், ஆயிரக்கணக்கான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது;

Update: 2025-04-19 06:20 GMT

ஈரோடு மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பெருந்துறையில் டாஸ்மாக் கடை மூடிய பிறகு மது விற்ற விக்ரம், கர்நாடகா மதுவை கடத்திய மனோகர்லால் ஜெயின், மேலும் ஈரோடு, நம்பியூர் மற்றும் பெருந்துறையில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்று வந்த வெள்ளியங்கிரி, சுந்தர்ராஜ் மற்றும் நிர்மலாதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தமாக 40 மதுப் பாட்டில்கள் மற்றும் 1,100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News