ஓமலூர் டவுன் பஞ்சாயத்து 4 கடைகளுக்கு சீல்
ஓமலூரில் டவ்ன் பஞ்சாயத் சார்பில் வாடகைக்கு விடப்பட்ட கடைகளில் வாடகை நிலுவையில் உள்ளதால் 4 கடைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள்;
வாடகை நிலுவையால் 4 கடைகளுக்கு 'சீல்'
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில், பஸ் நிலையம், செவ்வாய் சந்தை வளாகத்தில், 187 கடைகள் செயல்பட்டு வருகின்றன. வண்டிப்பேட்டை, சைக்கிள் நிறுத்துமிடம், காய்கறி சந்தை, ஆடு அடிக்கும் தொட்டி உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கும் சுங்க வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இரண்டு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல், மொத்தம் 1 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இது குறித்து அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை கடிதம் வழங்கியும் நிலுவைத் தொகையை வசூலிக்க முடியவில்லை. இந்நிலையில் செவ்வாய் சந்தை வளாகத்தில் உள்ள 4 கடைகள், 1.45 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்ததால், நேற்று முன்தினம், ஓமலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் நளாயினி தலைமையில் அதிகாரிகள், அந்த 4 கடைகளைப் பூட்டி, 'சீல்' வைத்தனர்.
இதுகுறித்து செயல் அலுவலர் நளாயினி கூறுகையில், "நிலுவைத்தொகை வசூலிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். ஏப்ரல் 25-ம் தேதி (நாளை) மேலும் சில கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். எனவே டவுன் பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாகக் கட்டி, நடவடிக்கை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்," என்றார்.