சீனாபுரத்தில் 221 மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுவிலக்கு முறையை மீறிய இருவரிடமிருந்து 221 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு டூவீலர் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது;
ஈரோடு: மஹாவீர் ஜெயந்தி முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில், 221 மதுபாட்டில்கள் விற்கப்பட்டு வந்ததை அறிந்த ஈரோடு மதுவிலக்கு போலீசார், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த அரவிந்த்குமார் (29) மற்றும் தேவகோட்டை காளீஸ்வரன் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ஈரோடு கனிராவுத்தர் குளம் டாஸ்மாக் அருகே, 33 மதுபாட்டில்களுடன் சரவணன் (44) என்பவரையும், வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்.