அரசு சான்றிதழுடன் தங்க வேலை வாய்ப்பு
ஈரோட்டில், நகை மதிப்பீட்டாளர் வேலைக்கு 10 நாள் சிறப்பு நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது;
ஈரோடு மேட்டூர் சாலையில், திருச்சி கபே அருகே அமைந்துள்ள ஜெம் அண்ட் ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டரில், வரும் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 10 நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில், தங்கத்தின் விலை கணக்கீடு, கொள்முதல் முறைகள், உரைக் கல்லில் தங்கத்தின் தரத்தை அறியும் நுட்பங்கள், ஹால்மார்க் தரம் அடையாளம் காணும் விதிகள் மற்றும் கடன் தொகை வழங்கும் நடைமுறைகள் போன்றவை விரிவாக கற்றுத் தரப்படும்.
பயிற்சியில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் யாரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு எதுவும் இல்லை. கல்வித் தகுதி குறைந்தது 8ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். பயிற்சி முடிவில் இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சிக்கான கட்டணம் ₹7,500. பயிற்சி முடிந்ததும், தேசிய கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிறுவனங்களில் மதிப்பீட்டாளர் பணியில்சேரும் வாய்ப்பு உள்ளது.
சேர விரும்பும் நபர்கள் மூன்று பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், முகவரி மற்றும் கல்வி சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94437-28438 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.