சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாகும் 6 வழக்கறிஞர்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Update: 2022-02-17 04:30 GMT

சென்னை உயர்நீதி மன்றம்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மும்பை உயர் நீதிமன்றத்தின் 10 வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் 6 வழக்கறிஞர்கள் என மொத்தம் 16 பேரை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "2022 பிப்.16ம் தேதி நடந்த உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் நிடுமோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, எஸ். சௌந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத், மற்றும் ஆர். ஜான் சத்யன் ஆகிய ஆறு பேரையும் நீதிபதிகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Tags:    

Similar News