சேலத்தில் வெறிநாய் கடியால் 2 ஆடுகள் பலி
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் , மணிவிழுந்தான் காலனியில் வெறி நாய் கடித்து 2 ஆடுகள் இறப்பு;
வெறிநாய்கள் தாக்கியதால் இரு ஆடுகள் உயிரிழப்பு: கால்நடை பாதுகாப்பில் அச்சம்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்ரமணி (வயது 60) தனது வீட்டருகே ஐந்து ஆடுகளை கட்டி வைத்திருந்தார். கடந்த இரவில், அடையாளம் தெரியாத வெறிநாய்கள் அந்த ஆடுகளை தாக்கியதால், இரவு முழுவதும் அதீதபீதியுடன் கடந்தது.
மறுநாள் காலை 6 மணியளவில், ஆடுகள் கடித்து குதறிய நிலையில் கிடந்ததை காண்ந்த சுப்ரமணி, அதிர்ச்சியடைந்தார். தாக்கப்பட்ட ஆடுகளில் இரண்டும் உயிரிழந்தது. மீதமுள்ள ஆடுகள் காயமடைந்த நிலையில் இருந்ததைத் தொடர்ந்து, தகவல் அறிந்த கால்நடை மருத்துவத்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, அவற்றிற்கு சிகிச்சை அளித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்து, “வெறிநாய்கள் இப்பகுதியில் அதிகமாக வலம் வருகிறது. இரவு நேரங்களில் ஆடு, கோழிகளை அடிக்கடி வேட்டையாடி வருகின்றன. கடந்த இரு மாதங்களில் மட்டுமே 50க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகள் தாக்குண்டு இறந்துள்ளன. தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென” வலியுறுத்தினர்.
இத்தகைய சம்பவங்கள் தொடருமானால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், ஊராட்சி மற்றும் விலங்கு நல வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.