லாரி- கார் மோதி விபத்து ஒருவர் பலி 3 பேர் படுகாயம்

Update: 2021-01-04 05:15 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன், சுந்தரபாண்டியம், சண்முகம்,சிலம்புசெல்வன் ஆகிய 4 பேர் குற்றாலம் சென்று விட்டு ஊர் திரும்பிய போது கிருஷ்ணன்கோவில் ஆயுதப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் அருகே மதுரையிலிருந்து வந்த லாரியும் குற்றாலத்தில் இருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிலம்புசெல்வன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் லோகநாதன், சுந்தரபாண்டியம், சண்முகம் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் 108 ஆம்புலன்ஸ் வர சற்று கால தாமதம் ஆனதால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.இறந்த சிலம்புசெல்வன் உடலை உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்ப்பட்ட விபத்தால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags: