சிவகாசியில், பா.ஜ.. மாவட்ட செயற்குழு கூட்டம்
sivakasi bjp dist.executive meeting சிவகாசியில் பாஜ சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டமானது நடந்தது. இக்கூட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.;
சிவகாசியில் பாஜ மாவட்ட செயற்குழு கூட்டமானது நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
sivakasi bjp dist.executive மீட்டிங்
தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் அடுத்த ௨௦௨௪ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் திமுக தமிழகத்தில் பெருவாரியான வெற்றியைப் பதிவு செய்தது. இதற்கு போட்டியாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பாஜ அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என இப்போதிருந்தே கட்சிப்பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழக தலைவர் அண்ணாமலையின் எழுச்சி மிகுந்த பேச்சால் நிர்வாகிகள் சுறுசுறுப்படைந்துள்ளனர். வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜ நிலையாக காலுான்றினால்தான் 2026 ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் பல எம்எல்ஏக்கள் செல்ல முடியும் என திட்டமிட்டு களப்பணி ஆற்றி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விருதுநகர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, மத்திய அரசு செய்திருக்கும் சாதனைகளை கிராமத்தில் இருக்கும் மக்களுக்கும் தெரியும் வகையில் கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டும். மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பிரதமர் மோடி செய்து வரும் நலத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று பேசினார்.
sivakasi bjp dist.executive meeting
கூட்டத்தில் சிவகாசி மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும், பட்டாசு தொழில் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.