இராஜபாளையத்தில் உலக மக்கள் பூரண குணமடைய வேண்டி வழிபாடு

இராஜபாளையம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் உலக மக்கள் பூரண குணமடைய வேண்டி கோமாதா கிராம தேவதை வழிபாடு நடைபெற்றது.;

Update: 2020-12-16 23:45 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிங்க ராஜா கோட்டை பெரிய தெருவில் அமைந்துள்ளது மிக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோவில். இந்த ஆண்டு நல்ல மழை பெய்ய வேண்டியும், நாடு செழிக்கவும், கொரோனா தாக்குதலில் இருந்து உலக மக்கள் பூரண குணமடைய வேண்டி முன்னோர்கள் வழிபட்ட கோமாதா கிராம தேவதை வழிபாடு நடைபெற்றது. கடந்த இரண்டு தினங்களாக பெண்கள், மற்றும் சிறுவர்கள் திருக்கோயிலில் கோலாட்டம் அடித்து திருவிழாவாக கொண்டாடினர்.

இத்திருவிழாவில் முன்னோர்களின் தெய்வமாகிய விவசாயத்திற்க்கு உதவும் பசுக்கன்று உருவம் செய்து வழிபாடு நடத்தி, பெண்கள் முளைப்பாரி மற்றும் கோலாட்டம் ஆடலுடன் பசு கன்று உருவத்திற்க்கு சிறப்பு பூஜை செய்து சொக்கர் கோவில் தெப்பத்தில் கரைத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை ராஜபாளையம் பிராமணர் சங்கம் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags: