காரியாபட்டியில் வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் நகை பணம் கொள்ளை

காரியாபட்டியில் தொழில் அதிபர் வீட்டின் கதவை உடைத்து பிரோவில் இருந்த 23 பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம்கொள்ளை, காவல்துறையினர் விசாரணை.;

Update: 2020-12-29 13:45 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பெரியார்நகர் முதல் தெருவில் வசித்து வரும் மாயாண்டி (எ) கணேசன் என்பவர் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளார்.

இன்று மாலை வீடு திரும்பிய மாயாண்டி (எ) கணேசன் வீட்டு கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு 23 பவுன் தங்க நகையும், சுமார் ஒன்றரை லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

உடனே காரியாபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாயஜோஸ் தலைமையிலான போலீசார் மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் கொண்டு விசாரணை செய்தனர். மாயாண்டி (எ)கணேசன் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தை விருதுநகர் மாவட்ட எஸ்.பி பெருமாள் நேரில் ஆய்வு செய்தார்.

Tags: