வேலூர் மாவட்டத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கத்திக்குத்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் மேல் வழித்துனையாங்குப்பம் அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ஹேமாத்குமார். இவரது பிறந்த நாளை நண்பர்களான அஜித், திலீப் ஆகியோர் நேற்று இரவு அங்குள்ள ஏரி பகுதியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதிபிறந்தநாள் கொண்டாட்டத்தில் கத்திக்குத்து ஒருவர் உயிரிழப்புயை சேர்ந்த ராபின், ரீகன் மற்றும் சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த சின்னா ஆகியோருக்கும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை ராபின், ரீகன், சின்னா ஆகியோர் கத்தி மற்றும் பிளேடால் சரமாரியாக தாக்கியதில் பலத்த படுகாயமடைந்த அஜித் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை தடுக்க வந்த அஜித்தின் சித்தப்பா வேலு என்பவருக்கும் கத்தி குத்து விழுந்ததில் குடல் சரிந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். திலிப்பிற்கு தோள்பட்டையில் கத்திக்குத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொலை சம்மந்தமாக ராபின், ரீகன், சின்னா ஆகிய மூன்று பேரை கைது செய்த மேல்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.