வேலூரில் 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணபலன் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ரங்காபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து துறை அனைத்து தொழிற்ச்சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.