தேர்தலை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் நிறுத்திவைப்பு
தேர்தலை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் புகார் பெட்டியில் மனுக்கள் பொதுமக்கள் போட்டு செல்கின்றனர்.;
பெட்டியில் மனுக்களை போடும் மக்கள்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றனர்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் அமலாக்கப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும் கிராமப் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை எழுதி ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வைத்துள்ள புகார் பெட்டியில் போட்டு செல்கின்றனர்.
இந்த புகாரின் பெட்டியில் போடப்பட்டு வரும் மனுக்கள் மாலையில் மனுக்கள் பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.