பள்ளியிலிருந்து 3 நாட்கள் நீக்கம்: மாணவன் தற்கொலை முயற்சி
திருவள்ளூரில் தனியார் பள்ளி மாணவன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன்.
திருவள்ளூர் அருகே தங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் தர்ஷன் இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் உடன் படிக்கும் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இருந்த ஆசிரியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தின் ஆக்சிலேட்டரை முறுக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இருசக்கர வாகனத்தின் ஆசிரியை, தனது இருசக்கர வாகனத்தை பழுது செய்துவிட்டதாக பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தர்ஷன் உட்பட மூன்று மாணவர்களையும் இரண்டு நாட்கள் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து பள்ளி மாணவன் தர்ஷன் தனது பெற்றோரிடம், தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் கண்ணாடியை திருப்பி தலைவாரியதாகவும், இதனால் தன்னை பள்ளி 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்வதாகவும் தெரிவித்ததை அடுத்து அவரது தந்தை மணிகண்டன் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யுமாறு கேட்டதால், அவரை பள்ளி நிர்வாகத்தினர் உன்னால் முடிந்ததை செய்துகொள் என அவமரியாதை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த மாணவன் தர்ஷன். மன உளைச்சல் காரணமாக வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
தகவல் அறிந்த பெற்றோர்கள் மாணவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் அறிந்த திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து பள்ளி பிரின்ஸ்பல் உமாசங்கர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, மாணவர்கள் மூன்று பேர் பள்ளி ஆசிரியை ஒருவரின் இருசக்கர வாகனத்தை பழுது செய்து விட்டதால் அதைப் பார்த்த ஆசிரியை பள்ளி நிர்வாகத்திடம் வாகனத்தை இயக்கும்போது தனக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் எனக்கும் எனது குடும்பத்தாரை யார் பார்த்துக்கொள்வது; என்ன பாதுகாப்பு உள்ளது என புகார் கூறியதால் மூன்று மாணவர்களை அழைத்து விசாரித்து இரண்டு நாட்கள் சஸ்பெண்ட் செய்ததாகவும், தகவல் அறிந்து வந்த தந்தையிடமும் தகவலை கூறியதை அடுத்து தந்தையின் முன்பே மாணவன் வாகனத்தை பழுது செய்ததாக ஒப்புக்கொண்ட நிலையில் மாணவனை தந்தை அடித்துதாகவும் தெரிவித்தார்.
மேலும் தங்கள் பள்ளியில் மாணவர்களை நாங்கள் அடிப்பதில்லை. மாணவன் மற்றும் அவனது தந்தை வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. நாங்களும் பள்ளி நிர்வாகமும் எப்படிப்பட்டவர்கள் என உங்களுக்குத் தெரியும். இந்தச் செய்தியை வெளியிட வேண்டாம் எனவும் பள்ளியின் பிரின்சிபல் தகவல் தெரிவித்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் திருவள்ளூர் மற்றும் பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.