முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Welfare Assistance To Public பொன்னேரி இடத்தை மீஞ்சூரில் முதல்வர் ஸ்டாலின் 71 வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Welfare Assistance To Public
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா.ஏழை எளியோர்களுக்கு நல திட்ட உதவி வழங்கப்பட்டது.
பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தடபெரும்பாக்கம்,சுப்பா ரெட்டிபாளையம்,நந்தியம்பாக்கம்,நாலூர்,உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது.
Welfare Assistance To Public
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய திமுகவினர்.
மேலும் ஏழைப் பெண்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டது. இதனை மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ் பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் நந்தியம்பாக்கம் கிராமத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்துக்கொண்டு முகாமினை துவக்கிவைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்தினை வழங்கினர் அதனை தொடர்ந்து, நாலூரில் புதிய நூலக கட்டிடம் அமைப்பதற்கான பூஜையிலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர், இதில் வல்லூர் தமிழரசன்,ஆவூர் அருள்,சரவணன்,ராஜ்குமார் உள்ளிட்டோர் உடன் இருக்க நிகழ்ச்சி ஏற்பாட்டினை நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் அவருடன் துணைத் தலைவர் ராஜி,சீனிவாசன்,சுப்பா ரெட்டிபாளையம் கோவிந்தசாமி, நாலூர் கேசவபுரத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாபு,திமுக நிர்வாகிகள் சுமன்,ராஜா,செந்தில்,மோகன்,நாலூர் காலனியில் சங்கர்,குடியரசு,வேலு,அருள்நிதி,சிவா,எட்டியப்பன்,புருஷோத்தமன் ஆகியோர் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செய்தனர்.